அரசியலமைப்பு சட்டத்தை யஸ்வந்த் சின்ஹா காப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் ஜூலை 18ம் தேதி குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளர். இதையடுத்து முன்னாள் மத்திய அமைச்சரான யஷ்வந்த் சின்ஹாவை எதிர்கட்சிகள் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்த எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் டெல்லி விஜய் சவுக் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 17 எதிர்கட்சிகளை சார்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை எடுத்துவைத்தோம். தற்போது நடப்பது பா.ஜ.க ஆட்சியல்ல. சங்க பரிவார்களின் ஆட்சி என்பதே நிதர்சனம். மேலும் அரசியலமைப்பை மாற்ற வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோள்.
எனவே, வாஜ்பாய் ஆட்சி காலத்தில் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற கே.ஆர்.நாராயணன் எதிர்த்தாரோ அதேபோன்ற ஒருவர் தான் குடியரசு தலைவராக வர வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அதனடிப்படையில் யஸ்வந்த் சின்ஹா பொருத்தமானவர், எனவே தான் அவரை எதிர்கட்சிகள் பொதுவேட்பாளராக அறிவித்துள்ளோம்.
யஸ்வன்ந்த் சின்ஹா குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அரசியலமைப்பு சட்டத்தை காப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.








