முக்கியச் செய்திகள் இந்தியா

குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா-எதிர்க்கட்சிகள் ஒருமனதாக முடிவு

குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவை நியமிக்க எதிர்க்கட்சிகள் ஒருமனதாக முடிவு செய்துள்ளது.

திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவர் வேட்பாளரை களமிறக்க முனைப்பு காட்டி வந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், யஷ்வந்த் சின்ஹாவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நிறுத்த முடிவு செய்துள்ளது. “வேட்புமனுவை ஜூன் 27ம் தேதி காலை 11.30 மணிக்கு தாக்கல் செய்ய உள்ளோம்” என்று  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.

முன்னதாக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சமாஜவாதி கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளரை தேர்வு செய்ய இன்று ஆலோசனையில் ஈடுபட்டது.

தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி, ஆம் ஆத்மி, பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றது.
முன்னதாக, கடந்த 15ம் தேதி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும் இந்தக் கட்சிகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக களமிறக்கலாம் என யோசனை முன்வைக்கப்பட்டது. எனினும், அதற்கு சரத் பவார் மறுப்பு தெரிவித்துவிட்டார். இதையடுத்து, தேசத்தந்தை மகாத்பா காந்தியின் பேரனான கோபாலகிருஷ்ண காந்தியின் பெயரை எதிர்க்கட்சிகள் முன்மொழிந்தது.

எனினும், அவரும் குடியரசுத் தலைவர் வேட்பாளராக போட்டியிட விருப்பமில்லை என்று தெரிவித்துவிட்டார். தன்னை விட அதிக திறமை கொண்டவர்களை முன்னிறுத்துங்கள் என்று அவர் எதிர்க்கட்சிகளுக்கு கோரிக்கை முன்வைத்தார்.

யஷ்வந்த் சின்ஹா

இந்நிலையில், யஷ்வந்த் சின்ஹாவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக களமிறக்க திரிணமூல் காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. முன்னதாக, கடந்த 2017ம் ஆண்டும் குடியரசுத் தலைவர் வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தியை நிறுத்த எதிர்க்கட்சிகள் விரும்பியது. எனினும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ராம்நாத் கோவிந்தை முன்னிறுத்தியதை அடுத்து, எதிர்க்கட்சிகளும் தங்களது விருப்பத்தை மறுபரிசீலனை செய்தன.

இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து அவர் இன்று விலகுவதாக அறிவித்தார். அவர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்தார். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்காக பாடுபட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறி அக்கட்சியில் இருந்து அவர் விலகுவதாக அறிவித்தார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு வெளியிட்டார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. குடியரசு தலைவர் தேர்தலை தற்போது உள்ள குடியரசுத் தலைவரின் பதவி காலம் முடியும் முன்னரே நடத்தி முடிக்க வேண்டும்.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் கலந்து கொள்ளும் முதல் ஒரு நாள் போட்டி இன்று தொடக்கம்

Saravana Kumar

இளைஞரை கவ்விச் சென்ற புலி: மூங்கில் கம்பால் போராடி மீட்ட நண்பர்கள்

Halley Karthik

வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படாது: மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார்

Arivazhagan CM