முக்கியச் செய்திகள் தமிழகம்

“கந்துவட்டி கொடுமையால் 5 ஆண்டுகளில் 20 பேர் தற்கொலை”

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் கந்துவட்டி கொடுமையால் 20 பேர் தற்கொலை
செய்து கொண்டுள்ளனர் என்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று ஆபரேஷன்
கந்துவட்டி தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர்
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது அவர் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆபரேஷன் கந்து வட்டி மூலம் 6 வழக்குகள்
பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆப்ரேஷன் கந்துவட்டி நடவடிக்கை கடந்த 7ஆம் தேதி தொடங்கப்பட்டது.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆபரேஷன் கந்து வட்டி மூலம் மகாராஜா கடை காவல் நிலைய எல்லையில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட நபரின் வீட்டை ஆய்வு செய்த ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஆபரேஷன் கந்து வட்டியின் இரண்டாம் கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனப்பள்ளி, ராயக்கோட்டை, கந்திகுப்பம், மத்திகிரி உள்ளிட்ட காவல் நிலைய பகுதிகளில் மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதன் மூலம் ஆபரேஷன் கந்து வட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தமாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரையில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கந்துவட்டி கொடுமையால் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர். கந்துவட்டி புகார்கள் வரப்பட்டால்
உடனடியாக அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் அச்சமின்றி
அருகாமையில் உள்ள காவல் நிலையங்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அல்லது வாட்ஸ்அப் உதவி சேவை மூலமாக புகார் அளிக்கலாம்.

மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் சட்டவிரோதமாக குட்கா
மற்றும் கஞ்சா கடத்திய 66 நபர்களின் வங்கி கணக்குகள் காவல்துறை மூலம்
முடக்கப்பட்டுள்ளது என்றார் சரோஜ்குமார் தாகூர்.

கடலூரில் காவலர் ஒருவர் கந்துவட்டி கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, ஆபரேஷன் கந்துவட்டி நடவடிக்கைக்கு காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அனைவருக்கும் சுகாதார வசதி கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்: உயர் நீதிமன்றம்

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அதிமுக முழு ஆதரவு அளிக்கும்: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

Arivazhagan CM

3ம் அலை வருவதற்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஆர்.பி.உதயகுமார்

Saravana Kumar