நூல் விலை உயர்வு; மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் முழு அடைப்பு போராட்டம்

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், 16 முதல் 21ஆம் தேதி வரை பின்னலாடை நிறுவனங்கள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தொழில் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். திருப்பூரில் ஆயிரத்திற்கும்…

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், 16 முதல் 21ஆம் தேதி வரை பின்னலாடை நிறுவனங்கள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தொழில் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

திருப்பூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக விளங்கும் நூலின் விலை, கிலோவுக்கு 40 ரூபாய் உயர்த்தி நூற்பாலைகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

அதன்படி, ஒரு கிலோ 20-வது நம்பர் கோம்டு நூல் ரூ.403-க்கும், 24-ம் நம்பர் ரூ.415-க்கும், 30-ம் நம்பர் ரூ.425-க்கும், 34-ம் நம்பர் ரூ.445-க்கும், 40-ம் நம்பர் ரூ.465-க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.395-க்கும், 24-ம் நம்பர் 405-க்கும், 30-ம் நம்பர் ரூ.415-க்கும், 34-ம் நம்பர் 435-க்கும், 40-ம் நம்பர் ரூ.455-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலையேற்றத்தை கண்டித்து, திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தியாவில் உள்ள நிறுவனங்களின் தேவைக்கு போக மீதம் இருக்கும் பஞ்சு மற்றும் நூலினை மட்டும் தான் ஏற்றுமதி செய்ய வேண்டும் எனவும், பஞ்சு மற்றும் நூலினை அத்தியாவசிய தேவை பட்டியலுக்கு கொண்டு வந்து பதுக்கலை முற்றிலுமாக தடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

அண்மைச் செய்தி: ‘லோகி-கமலின் விக்ரம் படத்தின் கதை இதுதானா?’

தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 16ம் தேதி முதல் 21ம் தேதி வரை கவன ஈர்ப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவும் ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது. இதனால் நாள் ஒன்றுக்கு 200 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்படும் எனவும் தொழில் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.