’தூக்கிச் சுமக்கவும் தெரியும், தூக்கிப் போட்டு மிதிக்கவும்..’ மிரட்டும் ’யானை’ டீசர்

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘யானை’ படத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படம், ’யானை’. இது அவருக்கு 33-வது படம். ஹரி…

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘யானை’ படத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படம், ’யானை’. இது அவருக்கு 33-வது படம். ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் முதல் படம் என்பதால் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அருண் விஜய் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். யோகிபாபு, பிரகாஷ் ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, புகழ், அம்மு அபிராமி உட்பட பலர் நடிக்கின்றனர்.

ஜி.வி பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்கி றார். டிரம்ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது.

’பாம்பன் பாலம், ஒரு கடல், இரு கரை, ஒரு காதல், வெறும் துரோகம், ஒரு நட்பு, பெரும் பகை’ என்று வாய்ஸ் ஓவர் ஒலிக்க, பிள்ளையாருடன் எண்ட்ரி கொடுக்கும் அருண் விஜய், வில்லன்களை நையப்புடைக்கிறார். அவர் நடையும் லுக்கும் மிரட்டுகிறது.

’இவருக்கு தூக்கிச் சுமக்கவும் தெரியும் தூக்கிப் போட்டு மிதிக்கவும் தெரியும் வா…’ என்று அருண் விஜய் அழைப்பதுடன் முடிகிறது அதிரடி டீசர்.

https://twitter.com/arunvijayno1/status/1473982491249700866

மேக்கிங்கும் விஷூவலும் டீசரில் மிரட்டுகிறது. இந்தப் படம் ஹரி- அருண் விஜய் கூட்டணி யின் ஆக்‌ஷன் அதிரடி என்பது சொல்லாமலேயே தெரிகிறது. இந்தப் படம் அடுத்த வருடம் மார்ச் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.