உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டு இழப்புக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப இறுதிப்போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலியா முதல்இன்னிங்சில் 469 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 163,, ஸ்டீவன் ஸ்மித் 121, அலெக்ஸ் கேரி 48 ரன்கள் சேர்த்தனர். சிராஜ் 4 விக்கெட்டுகளும், ஷமி, ஷர்துல் தாக்குர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இதனைத்தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்தது. ஆனால் ஆரம்பமே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தன. ரோகித் சர்மா 15 , சுப்மான் கில் 13, புஜாரா- விராட் கோலி தலா 14 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினர். ஒரு கட்டத்தில் 71 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்து இந்தியா தடுமாறியது.
பின்னர் களம் இறங்கிய ஜடேஜா, ரகானே ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. அஜிங்கியா ரஹானே 29 ரன்களும், ஶ்ரீகர் பரத் 5 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். ஜடேஜா 48 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா அணி சார்பில் கம்மின்ஸ், போலண்ட், கிரீன், ஸ்டார்க், நாதன் லியோன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணி ஆஸ்திரேலியாவை விட 318 ரன்கள் பின்னடைவில் உள்ளது.







