அருண் விஜய் ஒரு இயக்குநராக என்னைப் புரிந்து கொண்டு, இந்த படம் திரையரங்கில் வெளியிடலாம் எனச் சொன்னார்.
நடிகர் விஜயகுமார் தயாரிப்பில், இயக்குநர் குமரவேல் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடித்து உருவாகியுள்ள படம் சினம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிகழ்ச்சியில் சினம் படத்தின் தயாரிப்பாளர் விஜயகுமார், இயக்குநர் குமரவேல், நடிகர் அருண் விஜய், நடிகை பலக் லால்வானி, இசையமைப்பாளர் சபிர், பாடலாசிரியர் கார்கி மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் மற்றும் நடிகர் பார்த்திபன், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, நடிகர்கள் பிரசன்னா, சாந்தனு, இயக்குநர் ஹரி மற்றும் மகிழ் திருமேனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக அருண் விஜய், இப்படத்தில் தனது சொந்த குரலில் பாடிய பாடலை மேடையில் பாடினார். அதன் பின்னர் படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களால் இசை வெளியீடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து “பேசிய சினம் படத்தின் இயக்குநர் குமரவேலன், இந்த படம் புரசைவாக்கம் காவல் நிலையத்தில் எழுத்தராக இருக்கக் கூடிய சரவணன் அவர்களால் எழுதப் பட்டது. அருண் விஜய் பொறுத்தவரை அவரிடம் எனக்குப் பிடித்தது, நான் கடைசியாக என்ன பண்ணினேன் என அவர் பார்க்கவில்லை, என்ன பண்ண போகிறேன் என்பதைத் தான் அவர் பார்த்தார்.
என்மீது நம்பிக்கை வைத்துப் படத்தைத் தொடங்கினோம். படம் முடித்த பிறகு தான், இவர்களே தயாரிப்பாளராக இருந்தது எத்தனை வசதியாக இருந்தது என உணர்ந்தோம். கொரோனா காலகட்டத்தில் தான் படத்தை முடிக்கத் திட்டமிட்டோம். அப்போது நிறையப் பேர் இந்த படத்தை ott தளத்தில் கொடுக்கச் சொன்னார்கள். அப்போது நான் ஒரு இயக்குநராக இந்த படம் திரையரங்கில் வர வேண்டும் என்று தான் சொன்னேன்.
அப்போது ஒரு வெல் விஷராக இந்த படத்தை OTT தளத்தில் கொடுக்க வேண்டும் என அருண் விஜய்யிடம் சொன்னேன், அப்போது அருண் விஜய் ஒரு இயக்குநராக என்னைப் புரிந்து கொண்டு, இந்த படம் திரையரங்கில் வெளியிடலாம் எனச் சொன்னார். அந்த தைரியத்துடன் இப்போது இந்த படத்தைச் சொன்ன வார்த்தைக்காகத் திரையரங்கம் வரை எடுத்து வந்துள்ளார்” என நெகிழ்ச்சியுடன் பேசினார்.