சீனாவில் இன்று அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மேற்கு சீனாவின் மலைப் பகுதியாந சிச்சுவான் மாகாணத்தில் திங்கள்கிழமை பகல் 12.52 மணியளவில் ரிக்டர் 6.8 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து, இரண்டாவது நிலநடுக்கமானது அடுத்த 40 நிமிடங்களில் யான் நகரில் உணரப்பட்டுள்ளது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2ஆக பதிவாகியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் அதிர்வு உணரப்பட்டதையடுத்து அதிர்ச்சியடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், சேதங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
-ம.பவித்ரா