முக்கியச் செய்திகள் இலக்கியம் தமிழகம்

கன்னட கவிஞர் குவெம்பு பெயரிலான தேசிய விருதுக்கு எழுத்தாளர் இமையம் தேர்வு

கன்னட கவிஞர் குவெம்பு பெயரிலான தேசிய விருதுக்கு தமிழ் எழுத்தாளர் இமையம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருதைப் பெறும் தமிழின் முதல் எழுத்தாளரும் இவர் தான் என்ற பெருமையை இமையம் பெற்றுள்ளார். 

தமிழ் நவீன இலக்கிய உலகில் கவனிக்கத்தக்க படைப்புகளைத் தந்து தடம் பதித்தவர் எழுத்தாளர் இமையம். தனது நாவல்களை கதை மாந்தர்கள் போக்குடன் அணுகி, மிகக் காத்திரமாக பதிவு செய்தவர். இவர் எழுதிய பெத்தவன் நாவல் சாதி மறுப்பு திருமணம் தொடர்பான முக்கியமான உரையாடலைத் தொடங்கிவைத்தது. வரதட்சணை கொடுமையால் தீக்குளித்த பெண் குறித்து இவர் எழுதிய செல்லாத பணம், அழுத்தமான ரணங்களை பதிவு செய்திருந்தது. இப்படியாக பல முக்கிய படைப்புகளை தமிழுக்கு தந்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

செல்லாத பணம் நாவலுக்காக 2020ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது இமையத்திற்கு வழங்கப்பட்டது. இலக்கியம் தொடர்பாக பல முக்கிய விருதுகளை பெற்றுள்ள இவர், சமீபத்தில் தமிழ்நாடு அரசின் கனவு இல்லத் திட்டம் விருதுக்கும் தேர்வானார். இந்த நிலையில் குவேம்பு விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கன்னட எழுத்தாளர் குவெம்பு நினைவு அறக்கட்டளை சார்பாக, 2013 ஆம் அண்டு முதல் குவெம்பு ராஷ்டிரிய புராஸ்கர் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு (2022 ) தமிழ் மொழிக்காக இமையத்திற்கு வழங்கப்பட உள்ளது. அத்துடன் ரூ. 5 லட்சம் மற்றும் வெள்ளி பதக்கமும் வழங்கப்பட இருக்கிறது.


இதுவரை இந்த விருதைப் பெற்றவர்கள்

2013 – சச்சிதானந்தன் – மலையாளம்
2014 – நாமவர சிங் – ஹிந்தி
2015 – ஷியாம் மனோஹர் – மராத்தி
2016 – தேவனூரு மகாதேவா – கன்னடம்
2017 – ஹோமென் போர்கோஹைன் மற்றும் நீலமணி ஃபுகான் – அசாமி
2018 – ஜீலானி பானு மற்றும் ரத்தன் சிங் – உருது
2019 – குருபஜன் சிங் மற்றும் அஜீத் கௌர் – பஞ்சாபி
2020 – ராஜேந்திர் கிஷோர் பாண்டா – ஒடியா
2021 –  சத்யவதி – தெலுங்கு

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஊரன் அடிகளார் மறைவு-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

Web Editor

சென்னையில் ஷாருக்கானின் ஜவான் படப்பிடிப்பு

EZHILARASAN D

வாரிசு போஸ்டர் டீக்கோட்: ஒரே படத்துக்குள்ள இத்தனை படங்களா?

EZHILARASAN D