முக்கியச் செய்திகள் தமிழகம்

தென்னக ரயில்வே செயலை கண்டித்து திருவாரூர், நாகையில் ரயில் மறியல் நடத்தப்படும் -செல்வராசு எம்.பி

டெல்டா பகுதிகளைப் புறக்கணிக்கும் தென்னக ரயில்வே செயலை கண்டித்து வரும் 28ஆம் தேதி முதல் திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு தெரிவித்துள்ளார்.

திருவாரூர் தனியார் அரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட குழுக் கூட்டம் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த செல்வராசு, டெல்டா மாவட்டங்களுக்குத் தேவையான ரயில்கள் குறித்த கோரிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் போது அந்த கோரிக்கைகள் அலட்சியப்படுத்தப்பட்டும், நிறைவேற்றப்படாமலும் இருக்கின்றன. இதனால் டெல்டா பகுதியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், வர்த்தக சங்கம், ரயில் உபயோகிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த பகுதி புறக்கணிக்கப்படுகிறது என்ற கருத்தை முன்வைத்து இருக்கிறார்கள் என கூறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், டெல்டா பகுதிகளைப் புறக்கணிக்கும் தெற்கு ரயில்வேயை கண்டித்து 21ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என ஒருமித்தமாக முடிவு செய்யப்பட்ட நிலையில், 21ஆம் தேதி தமிழக முதல்வர் தலைமையில் ஊரக வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழு மாநில கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதனால் 21ஆம் தேதி நடைபெற இருந்த ரயில் மறியல் ஒத்திவைக்கப்பட்டு வரும் 28ஆம் தேதி ரயில் முறை போராட்டம் கோரிக்கை நிறைவேற்றும் வரையில் தொடர்ந்து இந்த போராட்டம் நடைபெறும் என்றார்.

அத்துடன், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டுமென விவசாயிகள் ஓராண்டு போராடிய பிறகு அந்த சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றது. அதேபோல டெல்டா பகுதி மக்களின் தொடர்வண்டி கோரிக்கையை நிறைவேறும் வரை இந்த போராட்டம் 28ஆம் தேதி முதல் தொடர் ரயில் மறியல் போராட்டமாக நடைபெறும். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பத்தாயிரம் பேர் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது என பேசினார்.

மேலும், வரும் 28-ஆம் தேதி காலை 9 மணி அளவில் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், ரயில் உபயோகிப்பார்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் 28 ஆம் தேதி காலை 9 மணிக்கு ரயில் மறியல் போராட்டம் தொடங்க உள்ளது. திருவாரூரில் மூன்று இடங்கள் மற்றும் நாகப்பட்டினத்தில் ஒரு இடம் என மொத்தம் நான்கு இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும். ரயிலை இயக்குவதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார்.

அத்துடன், இந்த போராட்டத்தில் 25000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று பாகுபாடு பார்க்காமல், இது அனைவரது பிரச்சனை, நம் பிரச்சனை,உங்கள் பிரச்சனை எனவே அனைவரும் ஒன்றுபட்டுப் போராடி கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம் என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

யாரும் கேட்கலையாமே: அநாதையாக கிடக்கும் ரூ.50 ஆயிரம் கோடி!

Gayathri Venkatesan

சர்தார்; தீபாவளியை குறிவைக்கும் கார்த்தி

EZHILARASAN D

கூட்டணி குறித்து கமல்ஹாசன் பேச்சு!

Niruban Chakkaaravarthi