முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆன்லைன் ரம்மி தடை சட்டம்: ஆளுநர் கேள்விகளுக்கு அரசு தரப்பில் நாளை பதில்

ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், ஆளுநர் தரப்பிலிருந்து எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு அரசு தரப்பில் நாளைக்குள் பதில் அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சட்டமன்றத்தில் அக்டோபர் 19ஆம் தேதி ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு முன்னதாக அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டது. அவசர சட்டத்தின் காலம் 6 வாரங்கள் என்ற அடிப்படையில், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான அவசர சட்டத்தின் காலம் வரும் 27 ஆம் தேதியுடன் காலாவதியாகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், நவம்பர் 22 & 23 ஆகிய தேதிகளில் ஆளுநரை சந்திப்பதற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தரப்பில் நேரம் கேட்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகின. அவ்வாறு நேரம் ஒதுக்கப்படாத நிலையில், ஆளுநர் தரப்பிலிருந்து சில கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கு நாளைக்குள்ளாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

T20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா – நாளை தொடக்கம்

EZHILARASAN D

காமன்வெல்த்; இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

G SaravanaKumar

வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட ஒரு கிலோ தலைமுடி கட்டி!