”வாவா என் தேவதையே” – பெண் குழந்தைக்கு தந்தையானார் நடிகர் பிரேம்ஜி

நடிகர் பிரேம்ஜி – இந்து தம்பதிக்கு பெண் குழந்தைப் பிறந்துள்ளது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடிப்பவர் நடிகர் பிரேம்ஜி. இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனும், டைரக்டர் வெங்கட் பிரபுவின் சகோதரர் ஆவார்.

நடிப்பு மட்டுமின்றி இசையமைப்பாளர், பாடகர் எனப் பன்முகம் கொண்ட பிரேம்ஜி  ‘சென்னை 600028 – 1 மற்றும் 2, கோவா, சரோஜா, சந்தோஷ் சுப்ரமணியம், மங்காத்தா, மாநாடு, கோட்” உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை வல்லமை பட இயக்குநர் கருப்பையா தெரிவித்துள்ளார். இதையடுத்து . திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பிரேம்ஜிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.