உலகின் மிகப்பெரிய பனிப்பாறை டமார்.. உருவானது, ‘ஏ-76’!

தென் துருவப் பகுதியான அன்டார்ட்டிகாவில் உள்ள உலகின் மிகப்பெரிய பனிப்பாறையான ரோனி உடைந்துள்ளது. உடைந்த பனிப்பாறையானது 125 கிலோ மீட்டர் நீளமும், 25 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. அதாவது சுமார் 1700 சதுர…

தென் துருவப் பகுதியான அன்டார்ட்டிகாவில் உள்ள உலகின் மிகப்பெரிய பனிப்பாறையான ரோனி உடைந்துள்ளது.

உடைந்த பனிப்பாறையானது 125 கிலோ மீட்டர் நீளமும், 25 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. அதாவது சுமார் 1700 சதுர மைல் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது பனிப்பாறை. மனித விரல் போல் காட்சி அளிக்கும் இந்தப் பனிப்பாறை WEDDELL கடல் பகுதியில் மிதந்து கொண்டிருக்கிறது.

ரோனி பனிப்பாறை உடைந்ததற்கு காலநிலை மாற்றம் காரணமில்லை என்று கடலியல் அறிஞர்கள் சொல்கிறார்கள். புதிய பனிப்பாறைக்கு ஏ-76 என பெயரிடப்பட்டுள்ளது. துருவப் பகுதிகளை ஆராயும் கடலியல் ஆய்வாளர் கீத் மெக்கின்சன் ரோனி பனிப்பாறை உடைந்ததை முதலில் கண்டுபிடித்தார்.

WEDDELL கடல் பகுதியில் மிதக்கும் பனிப்பாறை உருகினாலும், கடல் நீர்மட்டம் உயராது என்றும் கடலியல் அறிஞர்கள் சொல்கிறார்கள். அதற்கு, தண்ணீர் கிளாசில் போடப்பட்டுள்ள ஐஸ் கட்டிகள் உருகினாலும், அதே அளவு தானே இருக்கும் என்கிறார்கள் கடல் ஆராய்ச்சியாளர்கள்.

சரிதானே!

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.