உலகிலேயே மிகப்பெரிய சரக்கு விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது.
உலகிலேயே மிகப்பெரிய சரக்கு விமானம் ஏர் பஸ் பெலுகா 86,500 கிலோ எடை கொண்டது. 56.15 மீட்டா் நீளத்திலும், அதன் இறக்கைகள் 44.84 மீட்டா் நீளத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் விமானிகள் 2 போ் மட்டுமே அமர்ந்து பயணிக்க முடியும். இந்த பிரம்மாண்ட விமானத்தில் சுமாா் 51 டன் வரை சரக்கு ஏற்றி செல்ல முடியும்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து தாய்லாந்துக்கு சென்ற உலகிலேயே மிக பெரிய சரக்கு விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக சென்னையில் நேற்று 9.30 மணிக்கு தரையிறங்கியது. எரிபொருள் நிரப்பப்பட்டதை தொடர்ந்து இன்று அதிகாலை 1.30 மணிக்கு அந்த விமானம் தாய்லாந்து புறப்பட்டு சென்றது.
கடந்தாண்டு ஜூலை 11-ஆம் தேதி, எரிபொருள் நிரப்புவதற்காக முதல்முறையாக இந்த ராட்சத விமானம் சென்னை வந்தது. தற்போது இரண்டாவது முறையாக சென்னை விமான நிலையத்துக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது







