முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

சிறிய காடாக மாறிய வீடு; பூந்தொட்டிகள் ஆன தேங்காய் மட்டைகள்; கவனத்தை ஈர்க்கும் போபால் பெண்!

போபாலைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டிலேயே சிறிய காடு ஒன்றை உருவாக்கி அசத்தியுள்ளார்.

25 வயதான சாக்‌ஷி பரத்வாஜ் என்ற பெண்ணுக்கு இயற்கை மீது கொள்ளை பிரியம். அவரது ஆசையின் வெளிப்பாடாக தற்போது அவரது வீட்டில் 4,000 செடிகள் அழகாக காட்சியளிக்கின்றன. இதில் 450 வகை அரிய செடிகள் காணப்படுகின்றன. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த செடிகளை வித்தியாசமாக தேங்காய் மட்டைகள், வீணாக தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்களில் வளர்த்து வருகிறார். இதன்மூலம் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் என தெரிவித்துள்ளார். தான் தினமும் இளநீர் குடிப்பதாகவும் அதனால் அதனை வீணாக தூக்கி எறியாமல் பயனுள்ள வகையில் உபயோகித்ததாகவும் கூறியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இவர் கடந்த 2019ம் ஆண்டு முதல் பல்கலைக்கழகம் ஒன்றில் துணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். தொடக்கத்தில் சிறு சிறு செடிகளாக வளர்த்து வந்த அவர், தற்போது வித்தியாசமான செடிகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதன் நன்மைகளை மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறி அவர்களது மனதிலும் இந்த எண்ணத்தை விதைத்து வருவது பாராட்டுக்குரியது.

வீணாக தூக்கி எறியும் பொருட்களை வைத்து இதுபோல் ஒரு கலர்ஃபுல்லான கார்டனை உருவாக்கி காண்பித்த பெண்ணுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

4-ம் கட்ட முகாமில் 17.19 லட்சம் பேருக்கு தடுப்பூசி

Halley Karthik

மாவட்ட தேர்தல் அதிகாரிகளுகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை!

Jeba Arul Robinson

ஒற்றை ஆட்சி முறையை கொண்டுவர முயற்சி-முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

Web Editor

Leave a Reply