உலக அமைதி தினத்தை முன்னிட்டு திருமுறை விண்ணப்பம் நிகழ்ச்சி!

உலக அமைதி தினத்தை முன்னிட்டு சிதம்பரத்தில் தொடர்ந்து 12 மணிநேரம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள அறுபத்து மூவர் நாயன்மார்கள் மடத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் உலக அமைதி தினமாக…

உலக அமைதி தினத்தை முன்னிட்டு சிதம்பரத்தில் தொடர்ந்து 12 மணிநேரம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள அறுபத்து மூவர் நாயன்மார்கள் மடத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் உலக அமைதி தினமாக நேற்று வட அமெரிக்க பன்னிரு திருமுறை கழகம் மற்றும் ஓதுவா மூர்த்திகள் நலச்சங்கம் சார்பில் உலக நலன் கருதி திருமுறை விண்ணப்பம் நிகழ்ச்சி இரண்டாம் ஆண்டு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியானது உலகம் முழுவதும் 28 நாடுகளில் 24 மணிநேரம் தொடர்ந்து நடைபெற்றது .

இதில் இந்தியாவில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் காலை 6 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை தொடர்ந்து 12 மணிநேரம் நடைபெற்றது.  இதில் 108 ஓதுவா மூர்த்திகள் கலந்து கொண்டு 12 மணிநேரம் தொடர்ந்து திருமுறை விண்ணப்பம் செய்தனர். 27 ஞான ஆசிரியர்களால் இயற்றப்பட்ட பன்னிரு திருமுறை போற்றும் வகையில் இந்த நிகழ்வு நான்கு பகுதியாக பிரிக்கப்பட்டு 108 ஓதுவார்கள்,16 பக்கவாத்திய கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

ரெ. வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.