முக்கியச் செய்திகள் தமிழகம்

தோப்புக்கரணத்தில் உலக சாதனை

59 நொடிகளில் 115 தோப்புக்கரணம் செய்து புதுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் புதிய உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

குறிப்பிட்ட சில விஷயங்களை செய்துதான் சாதனை செய்ய வேண்டும் என்பதில்லை. எதிலும் சாதனை செய்யலாம் என்று புதுக்கோட்டையில் இருக்கும் இளைஞர் நிரூபித்துள்ளார். புதுக்கோட்டையை சேர்ந்த இளைஞர் விஜய். சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். பொதுவாகவே தவறு செய்யும் மாணவர்களுக்கு ஆசிரியர் தோப்புக்கரணம் போடச்சொல்லுவது வழக்கம்.

ஆனால் இந்த மாணவர் இதனை சாதனையாக செய்ய முயற்சித்து 59 செகண்டில் 115 தோப்புக் கரணம் போட்டு புதிய உலக சாதனை நிகழ்த்தினார். இதனைச் அங்கிகரித்து லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை விருது மற்றம் சான்றிதழ் வழங்கப்பட்டது. இது குறித்து அந்த மாணவர் விஜய் கூறுகையில் 3 மாதம் கடுமையாக பயிற்சி செய்து இந்த சாதனை புரிந்ததாக தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ராஜன் தலைமையில் குழு

Halley karthi

விவசாயிகள் போராட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆதரவு

Saravana

குளிர்பானம் குடித்த சிறுவர்களுக்கு ரத்த வாந்தி

Halley karthi