உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி – பிரக்ஞானந்தா பங்கேற்ற WR அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தல்!

உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரக்ஞானந்தா பங்கேற்ற WR அணி, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. ஜெர்மனியில் கடந்த 27-ம் தேதி தொடங்கிய உலக ரேபிட் செஸ் டீம் சாம்பியன்ஷிப் தொடர் இன்றுடன்…

உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரக்ஞானந்தா பங்கேற்ற WR அணி, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.

ஜெர்மனியில் கடந்த 27-ம் தேதி தொடங்கிய உலக ரேபிட் செஸ் டீம் சாம்பியன்ஷிப் தொடர் இன்றுடன் முடிவடைந்தது. இதில், 43 அணிகளை சேர்ந்த 300 வீரர்கள் கலந்துகொண்டனர். 12 சுற்றுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா பங்கேற்ற WR அணி 10 வெற்றி மற்றும் 2 டிரா என 702 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் விஸ்வநாதன் ஆனந்த், விதித் குஜராத்தி உள்ளிட்டோர் அடங்கிய ஃபிரீடம் அணி 582.5 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்தது. முதலிடம் பிடித்த அணிக்கு 89 லட்சத்து 59 ஆயிரம் ரூபாயும், 2-ம் இடம் பிடித்த ஃபிரீடம் அணிக்கு 53 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

உலக கோப்பை செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா வெள்ளிப்பதக்கம் வென்று பாராட்டுகளை குவித்த நிலையில், தற்போது மீண்டும் உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற அணியின் பிரக்ஞானந்தா முக்கிய பங்காற்றி இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.