மத்திய அரசின் சிலிண்டர் விலை குறைப்பு என்பது மிக முக்கியமான அறிவிப்பு என்றும், நாம் அனைவரும் பாராட்டி ஆக வேண்டும், இதை தமிழ்நாடு பாஜக மனதார வரவேற்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை பேரூரில் நடைபெற்ற நொய்யல் பெருவிழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, மத்திய அரசின் சிலிண்டர் விலை குறைப்பு என்பது மிக முக்கியமான அறிவிப்பு என்றும் இதை நாம் அனைவரும் பாராட்டி ஆக வேண்டும், இதை தமிழ்நாடு பாஜக மனதார வரவேற்கிறது எனத்தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், காவிரி விவாகரத்தில் கர்நாடக அரசின் நிலைப்பாடு என்பது அரசியல் அமைப்பு சட்டத்தை கேள்வி குறியாக்கும் செயல் என்றும் காவிரி ஆணையத்தின் உத்தரவை மீறி தன்னிச்சையாக மாநில அரசு முடிவு எடுப்பது என்பது மிகத்தவறான செயல் இந்த முக்கிய பிரச்சனையை திமுக அரசு சரியாக பேசி தீர்வு காண வேண்டும் எனகேட்டுகொண்ட அவர், கர்நாடகவில் பாஜக ஆட்சியில் இருக்கும் போது காவிரி விவாகரத்தை சரியான முறையில் கையாண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மத்திய அரசு தமிழகத்திற்கு குறைவான நிதி ஒதுக்குவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், மத்திய அரசு எந்த அளவிற்க்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ்நாட்டிற்கு நிதியையும், திட்டத்தையும் வழங்கியுள்ளது என்பதை அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு பாஜக வெள்ளை அறிக்கையாக சமூக வலைதளத்தில் வெளியிடுவோம் என்றும் முதலமைச்சர் பொய் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும், தேவையில்லாமல் பொய் பேசி மாட்டிக்கொள்வதாக அவர் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து ஊழல் பட்டியில் வெளியிடுவது குறித்த சீமான் கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர்கள், பாஜக அமைச்சர்கள் மீது ஏன் ஊழல் பட்டியிலை வெளியிடவில்லை என்று கேட்கும் நாம் தமிழர் கட்சியின் சீமான், ஏன், அவர்
வெளியிட வேண்டியது தானே. என்றும் நாங்கள் அடுப்பில் மீது கை வைத்துள்ளோம்
எங்களை குற்றம் சொல்லாமல் அவர் ஊழல் பட்டியிலை வெளியிடட்டும் எனத்தெரிவித்தார்.
அதேபோல் சீமான் மோடியை எதிர்த்து போட்டியிட்டால் தோற்றுப்போவார் என்றும் தோற்பவர் எங்கு போட்டியிட்டால் என்ன என்று தெரிவித்த அவர், மோடி வாரணாசியில் போட்டியிட்டால் அங்கு சீமான் போயிட தயாரா என்றும் போக வழி தெரியாமல் சென்று கொண்டிருப்பவர் எங்கு போட்டியிட்டால் எங்களுக்கென்ன என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
மேலும் அவர் வேண்டுமென்றால் பல்வேறு புகார்கள் இருக்கும் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோரை எதிர்த்து போட்டியிட வேண்டியது தானே என்றும் அவர்
தெரிவித்தார். தான் மேற்கொள்ளும் பாதையாத்திரையின் முக்கிய நோக்கமே மக்கள் பிரச்னையை ஒவ்வொரு பகுதியிலும் கேட்பது தான் என்று கூறிய அண்ணாமலை, கோவை விமான நிலையம் விரிவாக்க பணிகள் விரைந்து முடிய இருக்கிறது.
இது தொழில் நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கும் என்றும் அதேபோல் மத்திய அரசு, அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் கோவை போத்தனூர் ரயில் நிலையத்தை தர உயர்த்த இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.







