மகாராஷ்டிரா தலைமைச்செயலகத்திற்குள் புகுந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மகாராஷ்டிராவில் விளைநிலங்களில் தொழிற்சாலைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், கையகப்படுத்தியுள்ள நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை எனக் கூறியும் தலைமைச்செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து தலைமைச் செயலகத்திற்குள் நுழைந்து முதல் மாடிக்குச் சென்ற விவசாயிகள், பாதுகாப்பிற்காக கட்டப்பட்டுள்ள வலையில் விழுந்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் 5000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.







