உலகச் செயல்முறை மருத்துவ நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து தமிழ் நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
”உலகச் செயல்முறை மருத்துவ தினத்தன்று , மக்கள் கண்ணியத்துடனும் சுதந்திரத்துடனும் வாழ உதவும் மருத்துவர்களுக்கு வணக்கங்கள்.
நமது அரசாங்கம், மாற்றுத்திறனாளிகளுக்கான ’விழுதுகள்’ ஒருங்கிணைந்த சேவை மையம் மற்றும் ASD உள்ளவர்களுக்கான சிறப்பு மையம் மூலம் இந்த நோக்கத்தை மேம்படுத்துகிறது. அக்கறை, அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, ஒவ்வொரு தனிநபருக்கும் வாய்ப்பு கொண்ட தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்கி வருகிறோம்”
என்று குறிப்பிட்டுள்ளார்.






