தமிழக அரசு ஊக்குவித்தால் இன்னும் அதிகளவில் வெற்றி பெறுவேன் என பாரா
பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் தொடரில் தங்கப் பதக்கம் என்ற மனிஷா ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
உலக பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஜப்பான் டோக்கியோ நகரில் 2022 அக்டோபர் 31 தொடங்கி நவம்பர் 6-தேதி வரை நடைபெற்றது. இதில் சுமார் 44 நாடுகளில் இருந்து
வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கெளரவ கண்ணா தலைமையில் தமிழக பாரா பேட்மிண்டன் பயிற்சியாளர் பத்ரி நாராயணன் அடங்கிய 38 இந்திய வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உலக பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் ஒற்றையர் இறுதிப்
போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த மனிஷா ராம்தாஸ் தங்கம் வென்றார். தங்கப் பதக்கம் வென்ற மனிஷா ராமதாஸுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக
வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வீராங்கனை மனிஷா ராம்தாஸ், வருகின்ற 2024ம் ஆண்டு பாரிஸில் நடக்க இருக்கும் பாரா பேட்மிண்டனில் கலந்து கொண்டு வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை உள்ளது. அடுத்த வருடம் ஆசிய விளையாட்டில் தங்கம் வெல்வேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விளையாட்டு நான் எதிர்பார்த்தது போல தான் இருந்தது. ஆனாலும் இறுதியில்
கொஞ்சம் கடினமாக உள்ளது. தமிழக அரசு இதற்கு ஊக்குவித்தால் இன்னும்
அதிகளவில் வெற்றி பெறுவேன் என அவர் தெரிவித்தார்.