தஞ்சாவூரில், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, குழந்தை தொழிலாளர் டீ விற்பது போன்று வேடமிட்டு பள்ளி மாணவ மாணவிகள் மேற்கொண்ட நூதன விழிப்புணர்வு பேரணி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில், உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நூதன முறையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியைப் பட்டுக்கோட்டை டிஎஸ்பி (பொறுப்பு) சுபாஷ் சந்திரபோஸ் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். பேரணியில் பள்ளி மாணவ மாணவியர்கள் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளைக் கையில் ஏந்தியபடி பேரணியாகச் சென்றனர்.
பேரணியின் முன்பு மாணவர்கள் சிலம்பம் சுற்றியும், குத்துச்சண்டை மற்றும் குழந்தை தொழிலாளர் டீ விற்பது போன்று வேடமிட்டு நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை புனல் வாசல் டான்பாஸ்கோ பள்ளி நிர்வாகம் செய்திருந்தது. இந்த பேரணியை ஒட்டி காவல்துறையினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இறுதியில் பொறுப்பு டிஎஸ்பி சந்திரபோஸ் தன் கைப்பட எழுதிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்துத் தான் எழுதிய கவிதையை வாசித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








