இந்தியாவில் 96 போர் விமானங்கள் தயாரிக்க திட்டம்!

ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் கீழ், இந்தியாவில் 96 விமானங்கள் தயாரிக்கப்படவுள்ளன. அந்த விமானங்களை இந்திய விமானப் படை வாங்கவுள்ளது. மொத்தம் 114 போர் விமானங்களை விமானப் படை வாங்க திட்டமிட்டுள்ளது. அதில் 96 விமானங்கள்…

ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் கீழ், இந்தியாவில் 96 விமானங்கள் தயாரிக்கப்படவுள்ளன. அந்த விமானங்களை இந்திய விமானப் படை வாங்கவுள்ளது. மொத்தம் 114 போர் விமானங்களை விமானப் படை வாங்க திட்டமிட்டுள்ளது.

அதில் 96 விமானங்கள் இந்தியாவிலும், 18 விமானங்கள் வெளிநாட்டிலிருந்தும் வாங்கப்படவுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

வெளிநாட்டு விமான விற்பனையாளர்களுடன் விமானப் படை உயரதிகாரிகள் சமீபத்தில் ஆலோசனை நடத்தினர். அப்போது இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தில் போர் விமானங்களை தயாரிப்பது குறித்து விமானப் படை உயரதிகாரிகள் விவாதித்தனர். திட்டத்தின்படி, 18 போர் விமானங்கள் இறக்குமதி செய்யப்படும். அடுத்த 36 போர் விமானங்கள் நமது நாட்டில் தயாரிக்கப்படும். இதற்கான பணம் வெளிநாட்டு ரொக்கமாவும், இந்திய ரூபாயிலும் பாதிப் பாதியாக வழங்கப்படும்.

கடைசி 60 போர் விமானங்களுக்கு இந்திய ரூபாயில் ரொக்கமாக செலுத்தப்படும்.
போயிங், லாக்ஹீட் மார்டின், சாப், எம்ஐஜி, இர்குட் கார்ப்பரேஷன், டசால்ட் ஏவியேஷன் ஆகிய நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.