உலக கோப்பை டி20 கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு

உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் ஷர்மா (சி), கேஎல் ராகுல் (விசி), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (WK), தினேஷ் கார்த்திக்…

உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹித் ஷர்மா (சி), கேஎல் ராகுல் (விசி), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (WK), தினேஷ் கார்த்திக் (wk), ஹர்திக் பாண்டியா, ஆர். அஷ்வின், சாஹல், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, பி. குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கும் டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பைக்காக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர். ஆசிய கோப்பையின் போது காயமடைந்த ரவீந்திர ஜடேஜா, இந்திய அணியில் இடம் பெறவில்லை.

இந்தியாவும், பாகிஸ்தானும் அக்டோபர் 23ம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் மோதவுள்ளது. அடிலெய்ட், பிரிஸ்பேன், ஜீலாங், ஹோபார்ட், மெல்போர்ன், பெர்த் மற்றும் சிட்னி ஆகிய நகரங்களில் நடைபெறும் இந்தப் போட்டியில் பதினாறு நாடுகள் போட்டியிடுகின்றன.

கேப்டன் ரோஹித் சர்மா, துணை கேப்டன் கே.எல்.ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவர். விராட் கோலி 3வது வீரராக களமிறங்குவார்.
ஆல்-ரவுண்டர் ஜடேஜா இந்தத் தொடரில் காயம் காரணமாக சேர்க்கப்படவில்லை.அக்ஸர் படேல் இந்தப் போட்டியில் முக்கியமான வீரராக திகழ்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டாண்ட்பை பிளேயர்ஸ் பட்டியலில் முகமது ஷமி, ஸ்ரேயஸ் ஐயர், ரவி பிஸ்ணோய், தீபக் சஹர் ஆகியோர் உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.