முக்கியச் செய்திகள் உலகம் விளையாட்டு

உலகக் கோப்பை கால்பந்து – காலிறுதியில் போர்ச்சுக்கல், மொராக்கோ

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் வெற்றி பெற்று போர்ச்சுக்கல் மற்றும் மொராக்கோ அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. 

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் 2022 கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுப் போட்டிகள் முடிந்த நிலையில் நாக் அவுட் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. நேற்று நடைபெற்ற நாக் அவுட் சுற்றுப் போட்டிகளில் ஸ்பெயின் – மொரக்கோ, போர்ச்சுக்கல் – சுவிட்சர்லாந்து அணிகள் மோதின.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

உலக தரவரிசையில் 7வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் அணியை, 22வது இடத்தில் இருக்கும் மொராக்கோ அணி எதிர்கொண்ட போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக முயற்சி செய்தன. ஆனால் ஆட்ட நேரமுடிவின்போது இரு அணிகளும் எந்த கோலும் அடிக்காமல், 0-0 என்று சமனில் இருந்தன. கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

இதனால் பெனால்ட்டி ஷூட்-அவுட் முறையில் வெற்றி தோல்வியை தீர்மாணிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பெனால்ட்டி ஷூட்-அவுட் வாய்ப்பில், மொராக்கோ அணி 3 கோல்கள் அடித்தன. ஸ்பெயின் அணி எந்த கோலும் அடிக்கவில்லை. இதனால் 3-0 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி முதல் முறையாக காலிறுதிக்கு முன்னேறியது மொராக்கோ அணி.

மற்றொரு நாக்-அவுட் சுற்று போட்டியில், நட்சத்திர வீரர் ரொனால்டோவின் போர்ச்சுக்கல் அணியை சுவிட்சர்லாந்து அணி எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய போர்ச்சுக்கல் அணி ஆட்டத்தின் முதல் பாதியில் 2 கோல்களை அடித்து அசத்தியது. முதல் பாதியின் முடிவில் 2-0 என முன்னிலை வகித்த போர்ச்சுக்கல் அணி இரண்டாம் பாதியிலும், சுவிட்சர்லாந்தை பந்தாடியது. கோல் மழை பொழிந்த போர்ச்சுக்கல் அணி இரண்டாம் பாதியில் 4 கோல்கள் அடித்தது. சுவிட்சர்லாந்டது தரப்பில், மானுவல் அகாஞ்சி ஆட்டத்தின் 58வது நிமிடத்தில் கோல் அடித்தார். ஆட்ட நேர முடிவில் 6-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல் அணி அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

எவ்வித கட்டுமானம் ஆனாலும் சுற்றுசூழல் அனுமதி தேவை- நீதிமன்றம்

G SaravanaKumar

சென்னையில் உணவுத் திருவிழா: மீண்டும் பீஃப் பிரியாணி சர்ச்சை?

Web Editor

புத்தாண்டு சிறப்பு வழிபாடு; திருச்செந்தூரில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

Jayasheeba