முக்கியச் செய்திகள் தமிழகம்

மருத்துவருக்கும் மக்களுக்குமான உறவு: மருத்துவரின் நெகிழ்ச்சி பதிவு!

மருத்துவருக்கும் மக்களுக்குமான உறவு எப்படியானது என்பதனை பகிரும் விதமாக தஞ்சாவூரை சேர்ந்த மருத்துவர் பிரகாஷ் முகநூலில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Mbbs முடித்து விட்டு சென்னையில் ஒரு corporate மருத்துவமனையில், வார்டு டூட்டி டாக்டர் ஆக பணி புரிந்தேன். மிக நல்ல மருத்துவமனை அது, காலை தனியாக ரௌண்ட்ஸ் போக வேண்டும் பிறகு consultants கூட ரௌண்ட்ஸ் போக வேண்டும். அந்த மருத்துவமனை Consultants அனைவரும் உலக பிரபலங்கள், legends, மருத்துவம் கொடுப்பதில் என்னால் எந்த மாற்றமும் செய்யமுடியாது, அவர்கள் அனுமதி இல்லாமல்.

என் வார்டில் 77 வயது நபர் மூச்சு திணறலுக்காக அட்மிட் ஆகி இருந்தார். தினமும் அவரிடம் கொஞ்சம் நேரம் செலவு செய்து பேசுவேன். சில வார்த்தைகள் பேசவே சிரம படுவார், நான் பேசுவதை ஒரு சிறிய நோட்டில் குறித்து வைத்து கொள்வார். அவரின் மனைவி உடன் இருப்பார் எப்போதும், Consultant வந்து அட்வைஸ் சொன்னாலும் நான் ஒருமுறை சொன்னால் தான் அவருக்கு திருப்தி.

ஒரு நாள் மூச்சு திணறல் அதிகமாக, icu அனுப்ப முடிவு செய்யப்பட்டது. மிகவும் பயந்த அவருக்கு ஆறுதல் சொல்லி, நானும் அவருடனே icu சென்றேன். சென்ட்ரல் வீனஸ் catheter (கழுத்து வழியாக இதயத்தில் வைக்கும் டுயூப்)போட படுக்க வைக்கும் போது, என் கையை இறுக பற்றி கொண்டார், நான் தொடர்ந்து ஆறுதல் சொல்ல, கொஞ்சம் சமாதானம் ஆனார். Cpap ventilation என்ற ஒன்றில் ஒரு வாரம் icu வில் இருந்தார், காலை மாலை என்று போய் பார்த்து பேசுவேன். பார்த்த வுடன் கையை அசைத்து பேசுவார். கொஞ்ச கொஞ்சமாக உடல் தேறி டிஸ்சார்ஜ் ஆகும் போது, என் அட்ரஸ் நம்பர் அனைத்தயும் வாங்கி கொண்டார்.

என் பிறந்தநாளுக்கு கடிதமும், அதில் icu வில் இருக்கும் போது நான் ஆறுதல் சொன்னதற்கு நன்றி சொல்லி இருந்தார், பர்த்டே கிப்ட்டாக ஒரு 300 ரூபாய்க்கு cheque கும் அனுப்பினார், மேற்படிப்புக்கு வாழ்த்து சொல்லி கடிதம் அனுப்பினார். அவ்வபோது, அவர் மனைவியிடம் பேசுவேன், அவரால் பேச முடியவில்லை. என் திருமணத்திற்கு, அழைப்பு விடுத்தேன். அவரின் மகனும் மருமகளும் நேரில் வந்து வாழ்த்தினார்கள்.

அவர் கை பட எழுதிய கடிதம் வந்தது அனைத்து கடிதங்களும் இன்னும் வைத்துள்ளேன் ஒரு முறை நேரில் வந்து பார்ப்பதற்கு போன் செய்தேன், அவருக்கு மூச்சு திணறல் அதிகமா இருப்பதாக சொன்னார்கள் பிறகு கடிதம் எதுவும் வரவில்லை, அவரின் அட்ரஸ் போன் நம்பர் இருந்தும், நான் போன் செய்யவில்லை. ஒரு வேலை அவர் இல்லையென்றால், அது என்னால் தாங்க முடியாது என்ற காரணத்தினால், தான் 8 வருடங்கள் ஆகிறது.

அந்த மருத்துவமனையில் உள்ள பெரிய பெரிய மருத்துவர்களை விட என்னை அவருக்கு ஏன் அவ்வளவு பிடித்தது? என்பது இன்று வரை எனக்குகுள் இருக்கும் ஒரே கேள்வி அதை கடைசி வரை நான் அவரிடம் கேட்கவே இல்லை!

Advertisement:
SHARE

Related posts

புதுச்சேரி ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்பு!

Niruban Chakkaaravarthi

நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 29-ம் தொடக்கம்; மக்களவை செயலகம் அறிவிப்பு!

Saravana

மாணவர்களிடம் பாலியல் தொல்லை குறித்த புகார்களை பெற கட்டணமில்லா தொலைபேசி எண்

Halley Karthik