உலக தடகள சாம்பியன்ஷிப் – இறுதி போட்டிக்குள் நுழைந்த இந்திய வீராங்கனை

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை அன்னு ராணி அபாரமாக விளையாடி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.   உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன.…

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை அன்னு ராணி அபாரமாக விளையாடி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

 

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன. இன்று மகளிருக்கான ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்றன. அதில் இந்தியா சார்பில் அன்னு ராணி பங்கேற்றார். இந்தப் போட்டியில் பல நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றதால் கடும் சவாலுக்கு மத்தியில் அன்னுராணி களம் கண்டார்.

 

இந்நிலையில், போட்டி தொடங்கியதும் அன்னு ராணி தன்னுடைய முதல் வாய்ப்பில் ஃபவுல் செய்தார். அடுத்து தன்னுடைய இரண்டாவது வாய்ப்பில் 55.35 மீட்டர் தூரம் ஈட்டியை வீசினார். இதன்காரணமாக கடைசி வாய்ப்பில் அவர் 60 மீட்டருக்கு அருகே வீசினால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது.

இந்தச் சூழலில் மூன்றாவது மற்றும் கடைசி வாய்ப்பை பயன்படுத்திய அன்னு ராணி சிறப்பாக விளையாடி, கடைசி வாய்ப்பில் இவர் 59.60 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார். அத்துடன் 8வது இடத்தை பிடித்தார். முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள். அதன் அடிப்படையில் அன்னு ராணி 8வது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் 2வது முறையாக உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு அன்னு ராணி முன்னேறி அசத்தியுள்ளார்.

 

நடப்பு உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் அவினாஷ் சேபிள், முரளி ஸ்ரீசங்கர் ஆகியோருக்கு பின்பு அன்னு ராணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.