மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இன்றைய லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் மோதி வருகின்றன. கொழும்புவில் நடக்கும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 247 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியில் ஹர்லீன் டியோல் 46 ரன்களும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 32 ரன்களும் எடுத்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் அந்த அணியின் டையானா பைஹ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து, 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது.







