மகளிர் டி 20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவிடம் தோல்வி… தொடரில் இருந்து வெளியேறிய இந்திய அணி…!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்து இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற குரூப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின.

லார்ட்ஸ் திடலில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய ஹர்மன் பிரீத்கார் 56 (27) ரன்கள் விளாசினார். ஆஸ்திரேலிய அணியில் சோஃபி மோலினக்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 19 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய அணியில் எலிஸ் பெர்ரி 56 (38) ரன்களும் ஆஷ்லி கார்ட்னர் 53 (29) ரன்களும் விளாசினர். இந்திய அணியில் ஸ்ரீ சரணி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய அணி இந்த தோல்வி காரணமாக அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது. இந்திய அணி டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வெளியேறிய நிலையில் தென்னாப்பிரிக்க அணி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.