மகளிர் டி-20 கிரிக்கெட் : இந்தியா – இங்கிலாந்து இடையே இன்று இறுதி போட்டி

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இன்று மூன்றாவது மற்றும் இறுதி டி-20 போட்டியில் விளையாடுகிறது.   இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில்…

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இன்று மூன்றாவது மற்றும் இறுதி டி-20 போட்டியில் விளையாடுகிறது.

 

இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்கிறது. இதில் முதல் டி20-யில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. டெர்பியில் நடந்த 2வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கெம்ப் அதிரடியாக ஆடி 37 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பவுச்சர் 34 ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய இந்திய மகளிர் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷபாலி வர்மா 20 ரன்களும், ஹேமலதா 9 ரன்னிலும் வெளியேறினர். பின்னர் இறங்கிய ஸ்மிருதி மந்தனா அதிரடியாக விளையாடினார்.

அவர் 53 பந்துகளில் 79 ரன்களை குவித்ததால், 16.4 ஓவர்களில் இந்திய ணி 146 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஒரு போட்டியிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் என்ற கணக்கில் நீடித்து வருகிறது. இதைத்தொடர்ந்து இரு அணிகளும் மோதும் கடைசி டி-20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இரு அணிகளும் விளையாடுவதால், ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.