சம உரிமை, பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பெண்கள் வேலைநிறுத்தம் – ஆதரவு தெரிவித்து களத்தில் இறங்கிய ஐஸ்லாந்து பிரதமர்!!

ஐஸ்லாந்து நாட்டில் சம வேலைக்கு சம ஊதியம், பாலின சமத்துவத்தை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கு ஆதரவு தெரிவித்து அந்நாட்டு பிரதமர் கேத்ரின் ஒரு நாள் முழுவதும் தனது பணிகளை புறக்கணித்தார். ஐஸ்லாந்து…

ஐஸ்லாந்து நாட்டில் சம வேலைக்கு சம ஊதியம், பாலின சமத்துவத்தை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கு ஆதரவு தெரிவித்து அந்நாட்டு பிரதமர் கேத்ரின் ஒரு நாள் முழுவதும் தனது பணிகளை புறக்கணித்தார்.

ஐஸ்லாந்து நாட்டில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களில் ஆண்களின் வருமானத்தை விட 20 சதவீதம் குறைவாகவே பெண்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. குழந்தைகள் பாதுகாப்பு, மருத்துவம் போன்ற பொதுநல சேவைகளில் அதிக அளவில் பெண்கள் ஈடுபட்டிருந்தாலும், போதிய அளவிலான ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இதனை கண்டித்து நேற்று ஐஸ்லாந்து நாட்டில் உள்ள 90% பெண்கள், பணிகளை புறக்கணித்துவிட்டு ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுனர். பலர் தங்களது வீடுகளிலேயே தங்கியிருந்தனர். பெண்கள் முன்னெட்டுத்த இந்த போராட்டத்திற்கு கூடுதல் வலிமை சேர்க்கும் வகையிலும், ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் ஐஸ்லாந்து பிரதமர் கேத்ரின் ஜாக்கோப்ஸ்டாட்டிர், நேற்று ஒரு நாள் முழுவதும் தனது பணிகளை புறக்கணித்தார்.

இதையும் படியுங்கள் : இந்திய – அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு உயரிய விருது..! – அதிபர் ஜோ பைடன் பாராட்டு

50 ஆண்டுகளுக்கு முன்பே சம வேலைக்கு சம ஊதியம், பாலின சமத்துவம் வேண்டி போராட்டம் துவங்கிய போதும், இன்று வரை போராட வேண்டிய சூழ்நிலை தொடர்ந்து வருவதாக கேத்ரின் தெரிவித்துள்ளார். முழுமையான பாலின சமத்துவம் ஏற்பட இன்னும் 300 ஆண்டுகள் கூட ஆகலாம் என்றும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.