சூரரைப் போற்று படத்தின் கூட்டணி சூர்யாவின் 43வது படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, அவரின் 43-வது படத்தை இயக்குநர் சுதா கொங்காரா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. முன்னதாக, சுதா கொங்காரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூர்யா வென்றிருந்தார். இந்நிலையில், மீண்டும் இக்கூட்டணி இணைய உள்ளதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் சுதா கொங்கரா தயாரிக்கும் சூர்யாவின் புதிய படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து துல்கர் சல்மான், நஸ்ரியா நஸீம் மற்றும் லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் நடித்த விஜய் வர்மா உள்ளிட்டோர் இப்படத்தில் இணைந்துள்ளனர்.
சுதா கொங்கராவின் சூரறை போற்று படத்திற்கு இசையமைத்து சூப்பர் ஹிட் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை சிறப்பாக கொடுத்த ஜீ.வி.பிரகாஷ் தான் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். மேலும் ஜீ.வி.பிரகாஷிற்கு இந்த படம் 100வது படமாகும்.
இப்படத்தின் டைட்டிலில் மூன்று வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஒரே ஒரு வார்த்தையை மட்டுமே படக்குழு அறிவித்துள்ள மீதமுள்ள இரண்டு வார்த்தைகளை மறைத்து “புறநானுறு” எனும் வார்த்தையை படக்குழு வெளியிட்டுள்ளது.







