மகளிர் பிரீமியர் லீக்: ரூ.3.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஸ்மிரிதி மந்தனா

மகளிர் பிரீமியர் லீக் போட்டிகளுக்கான ஏலத்தில் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 3.4 கோடிக்கு ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். முதன்முறையாக நடைபெற உள்ள மகளிர் பிரீமியர் லீக்கில் பங்கேற்க உள்ள, வீராங்கனைகளுக்கான ஏலம் இன்று…

மகளிர் பிரீமியர் லீக் போட்டிகளுக்கான ஏலத்தில் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 3.4 கோடிக்கு ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

முதன்முறையாக நடைபெற உள்ள மகளிர் பிரீமியர் லீக்கில் பங்கேற்க உள்ள, வீராங்கனைகளுக்கான ஏலம் இன்று நடைபெற்றது. மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் சென்டரில் பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் இந்த ஏலம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் முக்கிய நிர்வாகிகள் தங்களுக்கான வீராங்கனைகளைத் தேர்வு செய்ய, 5 அணிகளின் உரிமையாளர்களும் பங்கேற்றனர்.

இதில், குஜராத் ஜெயண்ட்ஸ் அணித் தலைமை பயிற்சியாளர் ரேச்சல் ஹெய்ன்ஸ், பந்துவீச்சு பயிற்சியாளர் நூஷின் அல் காதீர், பேட்டிங் பயிற்சியாளர் துஷார் அரோத்தே, மற்றும் ஆலோசகர் மிதாலி ராஜ் ஆகியோரும், மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் தலைமை பயிற்சியாளர் சார்லோட் எட்வர்ட்ஸ், பந்துவீச்சு பயிற்சியாளர் மற்றும் வழிகாட்டி ஜூலன் கோஸ்வாமி, பேட்டிங் பயிற்சியாளர் தேவிகா பால்ஷிகார், மஹேல ஜயவர்தன ஆகியோர் அணியில் பங்கு வகிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், UP வாரியர்ஸ் தலைமை பயிற்சியாளர் ஜான் லூயிஸ், உதவி பயிற்சியாளர்கள்: அஞ்சு ஜெயின் மற்றும் ஆஷ்லே நோஃப்கே மற்றும் ஆலோசகர் லிசா ஸ்தலேகர் ஆகியோரும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி சார்பில் தலைமை பயிற்சியாளர் ஜொனாதன் பாட்டி, உதவி பயிற்சியாளர்கள் ஹேமலதா கலா மற்றும் லிசா கெய்ட்லி பீல்டிங் பயிற்சியாளர் பிஜு ஜார்ஜ் ஆகியோர் அணியில் பங்கு வகிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் மார்ச் 4ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை இந்த தொடர் நடைபெற உள்ளது. அறிமுக தொடரில் மொத்தம் 22 போட்டிகள் நடைபெறும் எனவும், பர்போர்ன் மற்றும் டி.ஓய். பட்டேல் மைதானத்தில் போட்டிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற ஏலத்தில், இந்திய மகளிர் டி20 உலகக் கோப்பை அணியின் கேப்டன் சபாலி வர்மா, டெல்லி அணிக்காக ரூ. 2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். மேலும், இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மாவை UP வாரியர்ஸ் அணி ரூ. 2.6 கோடிக்கும், இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ரூ. 3 கோடியே 40 லட்சத்திற்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஹர்மன்ப்ரீத் கவுரை 1.8 கோடி ரூபாய்க்கு மும்பை அணியும், சோஃபி டிவைன் (NZ) 50 லட்சத்திற்குப் பெங்களூரு அணியும், ஆஷ்லே கார்ட்னர் (Aus) 3.2 கோடி ரூபாய்க்குக் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும், எலிஸ் பெர்ரி (Aus) 1.7 கோடி ரூபாய்க்கு பெங்களூரு அணியும், சோஃபி எக்லெஸ்டோனை (Eng) 1.8 கோடி ரூபாய்க்கு உ.பி. வாரியர்ஸ் அணியும், தீப்தி ஷர்மாவை 2.6 கோடி ரூபாய்க்கு உ.பி. வாரியர்ஸ் அணியும், ரேணுகா சிங்கை 1.5 கோடி ரூபாய்க்கு பெங்களூரு அணியும், ஏலம் எடுத்தன.

அத்துடன், நடாலி சைவ்ரை (Eng) 3.2 கோடிக்கு மும்பை அணியும், தஹ்லியா மெக்ராத்தை (Aus) 1.4 கோடிக்கு உபி வாரியர்ஸ் அணியும், பெத் மூனியை (Aus) 2 கோடிக்குக் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும், ஷப்னிம் இஸ்மாயிலை (SA) 1 கோடிக்கு உபி வாரியர்ஸ் அணியும், அமெலியா கெரை (NZ) 1 கோடிக்கு மும்பை அணியும், சோபியா டன்க்லி (Eng) 60 லட்சத்திற்குக் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும், ஜெமிமா ரோட்ரிக்ஸை 2.2 கோடிக்கும், மெக் லானிங்கை (Aus) – 1.1 கோடிக்கும், ஷஃபாலி வர்மாவை 2 கோடிக்கும், டெல்லி அணி ஏலம் எடுத்தனமேலும், அன்னாபெல் சதர்லேண்ட் (Aus) 70 லட்சத்திற்கு குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும், பூஜா வஸ்த்ரகரை 1.9 கோடிக்கு மும்பை அணியும், ஹர்லீன் தியோலை 40 லட்சத்திற்கும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும், டியான்ட்ரா டாட்டின் (WI) 50 லட்சத்திற்கு குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும், யாஸ்திகா பாட்டியாவை 1.5 கோடிக்கு மும்பை அணியும், ரிச்சா கோஷை 1.9 கோடி பெங்களூரு அணியும், அலிசா ஹீலியை (Aus) 70 லட்சத்ட்ஜிற்கு உ.பி. வாரியர்ஸ் அணியும், அஞ்சலி சர்வானியை 55 லட்சத்திற்கும், ராஜேஸ்வரி கயக்வாட்டை 40 லட்சத்திற்கும் UP வாரியர்ஸ் ஏலம் எடுத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.