நம்பிக்கை நம்மை சூப்பர் ஹியூமனாக்கும் என்ற சமந்தாவின் இன்ஸ்டா போஸ்ட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையான சமந்தா பல்வேறு படங்களில் பிஷியாக நடித்து வந்தார். இந்நிலையில், திடீரென மயோசிடிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த தகவல் திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியில் ஏற்படுத்தியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சமந்தா நடித்த யசோதா திரைப்படம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், அவரது நடிப்பில் உருவாகியுள்ள சாகுந்தலம் திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்திலும், ரூஸோ சகோதரர்கள் இயக்கும் எபிசோடில் சமந்தா, வருண் தவானுடன் ‘சிட்டாடல்’ தொடரிலும் நடித்து வருகின்றார்.
இதையும் படிக்க: வகுப்பறையில் தோசை சுட்ட மாணவர்; வைரலாகும் வீடியோ!
இந்நிலையில், சமந்தா தனது வீட்டில் உள்ள லிங்க பைரவி முன் அமர்ந்து சுவாமியை வழிபடும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், “சில நேரங்களில் சூப்பர் ஹியூமன் சக்தி தேவைப்படுவதில்லை. நம்பிக்கை உங்களை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லும். நம்பிக்கை நம்மை அமைதியாக்கும். நம்பிக்கை நண்பராகவும் ஆசானாகவும் மாறும். நம்பிக்கை உங்களை அசாதரண மனிதாக்கும்” எனப் பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவிற்கு நடிகையும் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா, “ஆமாம்” என கமெண்ட் செய்திருந்தார். இந்தப் பதிவுக்கு பலரும் லைக்ஸ் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
-ம.பவித்ரா