இரண்டாவது மகளிர் உலகக் கோப்பை கபடி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்றது. 11 அணிகள் இடம்பெற்ற இந்த தொடரில் இதில் ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்திய அணி முதலிடமும், வங்காளதேசம் 2-வது இடமும் பெற்று அரையிறுதிக்கு முன்னேறின. அதேபோல் ‘பி’ பிரிவில் சீன தைபே முதலிடமும், ஈரான் 2-வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
அரையிறுதியில் ஈரானை இந்தியாவும், வங்காளதேசத்தை சீன தைபே அணியும் எதிர்கொண்டன. இதில் இந்தியா மற்றும் அசீன தைபே ஆகிய அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறின. இரு அணிகளுக்கு இறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 35-28 என்ற புள்ளி கணக்கில் சீன தைபேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
இதனை தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் கபடி அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஏற்கனவே 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கபடி தொடரில் ஈரானை வீழ்த்தி இந்தியா அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்த நிலையில் தற்போது 2 ஆவது முறையாக இந்திய மகளிர் கபடி அணி சாம்பியன் பட்டத்த வென்று அசத்தியுள்ளது.








