திமுகவின் ஆட்சியின் தகுதிவாய்ந்த குடும்பதலைவிகளுக்கு மகளீர் உரிமைத் தொகையாக மாதம் ரூ. 1000 வழங்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் மகளீர் உரிமைத்தொகை பெரும் பங்கு வகித்தது. திமுக மீண்டும் ஆட்சியமைத்தால் மகளிர் உரிமைத் தொகை 2000 ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கபப்ட்டது. அதே போல் அதிமுகவும் மகளிர் உரிமைத் தொகை ரூ 2,000 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தது.
தவெக சார்பில் ஒவ்வொரு குடும்பத்தலைவிக்கும் அவர்களுடைய வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் 2500 ரூபாய் வரவு வைக்கப்படும் வாக்குறுதி அளித்திருந்தது. தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில் மகளிர் உதவித்தொகை 2500 ஆக உயர்த்தப்படுமா..? அல்லது 1000 ரூபாயகவே தொடருமா என்கிற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் மே மாததிற்கான மகளிர் உரிமைத் தொகையானது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உரிமைத்தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது. மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும்” கூறப்பட்டுள்ளது.







