பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் : தாய்லாந்து, இந்தியா அணிகள் இன்று மோதல்!

கிரிக்கெட் போட்டியில் தாய்லாந்துடன் இன்று இந்தியா மோதுகிறது.

10-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங், தாய்லாந்து அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். தொடரின் 3-வது நாளான இன்று நடைபெறும் 3-வது லீக் ஆட்டத்தில், இந்திய அணி, தாய்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.