110 விதியின் கீழ் வழக்குகள் வாபஸ் அறிவிப்பு சர்ச்சை : பேசியதை திரும்பப் பெற்ற உதயநிதி – சபாநாயகர் பாராட்டு!

நான் சொன்னதை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன் என்று சொன்ன பெருந்தன்மைக்காக உதயநிதியை, சபாநாயகர் பாராட்டினார்.

தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது பேசியவர், கடந்த ஆட்சியில் 2021- 26 ஆம் ஆண்டில் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக 110 விதியின் கீழ் மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகளை வெளியிடலாமே தவிர வழக்குகள் ரத்து என்பதை அறிவிக்க கூடாது. கடந்த காலத்தில் அப்படி அறிவிக்கப்பட்டதில்லை என வாதிட்டனர். இதற்கு சபாநாயகர் கூறுகையில், முதல்வர் 110 விதியின் கீழ் அதை அறிவிக்கலாம். எந்த விதி மீறல் நடைபெறவில்லை என கூறினார்.

இந்நிலையில் சட்டப்பேரவை பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்,

110 விதியின் கீழ் முதலமைச்சர் சில அறிவிப்புகளை வெளியிட்டார். எங்கள் ஆட்சியில் 110 விதியின் கீழ் அந்த வழக்குகள் வாபஸ் பெறப்படவில்லை என்று நான் தெரிவித்தேன். அதற்கு உரிய ஆதாரங்களை சபாநாயகர் கொடுத்தார். நாங்கள் 110 விதியின் கீழ் தான் அறிவிப்பு வெளியிட்டுள்ளோம். நான் பேசியதை திரும்ப பெற்றுக் கொள்கிறேன் என்றார்.

இதன் பிறகு பேசிய சபாநாயகர், ஏற்று கொண்ட உங்கள் பெருந்தன்மையை பாராட்டுகிறேன் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.