20-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, கால்இறுதியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஜப்பானை வீழ்த்தியது.
தொடர்ந்து அரையிறுதியில் வங்காளதேசத்தை 114 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. மறுபுறம், சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணி, மலேசியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்த நிலையில் ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் இலங்கை அணி பந்துவீசியது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்திருந்தபோது ஷபாலி வர்மா 48 ரன்னில் ஆட்டம் இழந்தார். 28 பந்தில் 3 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 48 ரன்கள் குவித்தார். தொடர்ந்து ஆடிய ஸ்மிருதி மந்தனா அரை சதம் கடந்து 79 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹர்மன்பிரீத் கவுர் 19 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் இறங்கிய ரிச்சா கோஷ 22 பந்தில் 3 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 49 ரன் குவித்தார். இறுதியில், இந்திய அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியுள்ளது.




