மல்யுத்த வீராங்கனைகள் விவகாரம்; பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சிங்கிற்கு ஜாமீன் வழங்கிய டெல்லி நீதிமன்றம்…

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சிங்கிற்கு ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. பாஜக எம்.பி.யும், முன்னாள் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷன்…

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சிங்கிற்கு ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாஜக எம்.பி.யும், முன்னாள் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் மீதான பாலியல் புகாரை, டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக கடந்த மாதம் 15-ந்தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில், பிரிஜ் பூஷன் சிங், முன் ஜாமீன் கேட்டு தொடர்ந்த மனு மீதான விசாரணை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்ற நீதிபதி ஹர்ஜீத் சிங் ஜஸ்பல் முன்பு வந்தது.

அப்போது, பிரிஜ் பூஷனுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டால், சாட்சியங்களை கலைக்க வாய்ப்புள்ளதால், ஜாமீன் வழங்கக்கூடாது என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, பிரிஜ் பூஷனுக்கு 2 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், முன் ஜாமீன் மனு மீதான விசாரணை வியாழக்கிழமை நடைபெறும் என நீதிபதி அறிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.