சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் மூன்றாவது வழித்தடத்தில் ரயில் நிலையங்கள் அமைக்க, ஆயிரத்து 204 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் டாடா நிறுவனத்துடன் கையெழுத்தாகி உள்ளது.
இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் தொடர்பாக, மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 3-வது வழித்தடத்தில், மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க, ஆயிரத்து 204 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் ஜப்பான் முகமை நிதியுதவியின் ஒரு பகுதி என்றும், இதற்கான ஏற்பு கடிதம் TATA PROJECTS நிறுவனத்திற்கு கடந்த ஜூன் 2ம் தேதி வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாவது வழித்தடத்தில் ஓட்டேரி, பட்டாளம், பெரம்பூர் பேரக்ஸ் சாலை, கெல்லீஸ், அயனாவரம், புரசைவாக்கம் ஆகிய ஆறு சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும் என கூறப்பட்டுள்ளது.







