குழந்தை ஆபாச படத்தை பதிவேற்றம் செய்ததாக புகார்: டிவிட்டருக்கு மீண்டும் சிக்கல்

டிவிட்டரில் குழந்தைகள் ஆபாச படத்தை பதிவேற்றம் செய்தது குறித்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையத்தின் புகாரின் பேரில் டெல்லி போலீசார் டிவிட்டர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் டிவிட்டர் சமூக வலைதளத்துக்கு அடுத்தடுத்து…

டிவிட்டரில் குழந்தைகள் ஆபாச படத்தை பதிவேற்றம் செய்தது குறித்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையத்தின் புகாரின் பேரில் டெல்லி போலீசார் டிவிட்டர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவில் டிவிட்டர் சமூக வலைதளத்துக்கு அடுத்தடுத்து சிக்கல் எழுந்துள்ளது. இந்திய வரைபடத்தை தவறாக வெளியிட்டதாக உத்தரபிரதேச போலீசார் 28ம் தேதி டிவிட்டரின் இந்திய அதிகாரிகள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்திய பகுதியான லடாக், ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளை இந்தியாவுக்கு வெளியே இருப்பது போல வரைபடம் வெளியிட்டிருந்ததாக பஜ்ரங்க் தள் நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் உத்தரபிரதேச மாநிலம் குர்ஜா நகர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த 27ம் தேதி மாலை சர்ச்சைக்குரிய வரைபடத்தை டிவிட்டர் நீக்கி விட்டது. எனினும் டிவிட்டர் இந்தியா நிர்வாக இயக்குநர் மணீஷ் மகேஸ்வரி மற்றும் செய்தி பங்குதாரர் அமிர்தா திரிபாதி ஆகியோர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையத்தின் புகாரின் பேரில் டெல்லி போலீசார், டிவிட்டர் இந்தியா மற்றும் டிவிட்டர் கம்யூனிகேஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகியவற்றுக்கு எதிராக போக்சோ சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் ஆணையம் சமர்பித்த டிவிட்டர் பக்கங்கள், டிவிட்டர் வெளியிட்ட படங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.