திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் சுய உதவிக் கடன் ரத்து – மு.க ஸ்டாலின்

கூட்டுறவு வங்கிகளில் பெண்கள் வாங்கிய மகளிர் சுய உதவிக் கடன்கள் அனைத்தும் திமுக ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்யப்படும் என அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக சார்பில், பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்ற…

கூட்டுறவு வங்கிகளில் பெண்கள் வாங்கிய மகளிர் சுய உதவிக் கடன்கள் அனைத்தும் திமுக ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்யப்படும் என அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக சார்பில், பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில், அக்கட்சித் தலைவர் முக ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும், பொதுமக்கள் அளித்துள்ள கோரிக்கை மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, நூறு நாட்களுக்குள் குறைகள் தீர்க்கப்படும் என்றார்.

பொள்ளாச்சி என்ற பெயரை சொல்வதற்கே பெண்கள் வெட்கப்படுவதாகவும், அந்த பெயரை அதிமுகவினர் கெடுத்து வைத்துள்ளதாகவும் முக ஸ்டாலின் விமர்சனம் செய்தார். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிமுக ஆட்சியில் முடிவே கிடையாது என தெரிவித்த மு.க. ஸ்டாலின், இத்தகையவர்கள், திமுக ஆட்சியில் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.

திமுக ஆட்சிக்கு வந்ததும், மகளிர் சுய உதவி கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்றும், ஐந்து சவரன் வரை நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.