ரூ. 12,000-க்கு டூத் பிரஷ் ஆர்டர் செய்த பெண் – அமேசான் கொடுத்த ஷாக்

அமேசானில் ரூ.12,000 மதிப்புள்ள டூத் பிரஷ் ஆர்டர் செய்த பெண்ணுக்கு மசாலா பாக்கெட்டுகள் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் யுகத்தில் நாம் அனைத்து பொருட்களையும் கடைகளுக்கு செல்லாமலே வீட்டிலிருந்தபடியே ஆர்டர் செய்கிறோம்.…

அமேசானில் ரூ.12,000 மதிப்புள்ள டூத் பிரஷ் ஆர்டர் செய்த பெண்ணுக்கு மசாலா பாக்கெட்டுகள் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆன்லைன் ஷாப்பிங் யுகத்தில் நாம் அனைத்து பொருட்களையும் கடைகளுக்கு செல்லாமலே வீட்டிலிருந்தபடியே ஆர்டர் செய்கிறோம். ஆடைகள், நகைகள் முதல் மளிகைப் பொருட்கள் வரை அனைத்துப் பொருள்களையும்  நம் வீடுகளுக்கு சில மணி நேரங்களிலேயே டெலிவரி செய்துவிடுவார்கள். இது ஒருபுறம் இருந்தாலும் சில சமயங்களில் தவறான பொருள்களை டெலிவரி செய்து சர்ச்சைக்குள்ளாகும் சம்பவங்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

அந்த வகையில், சமீபத்தில் அமேசானில் எலெக்ட்ரிக் டூத் பிரஷ் ஆர்டர் செய்த பெண்ணுக்கு, அதற்கு பதிலாக மசாலா பொடிகளை அனுப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அண்மையில் பெண் ஒருவர் ரூ. 12,000 மதிப்புள்ள எலெக்ட்ரிக் டூத் பிரஷை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவருக்கு மசாலா பொருட்கள் அடங்கிய பெட்டிகள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. 

https://twitter.com/badassflowerbby/status/1624787729400885249?s=46&t=meV_Yk8-9yVvqxR8IPn5iQ

இதுகுறித்து, அப் பெண்ணின் மகள் அவரது ட்விட்டர் பக்கத்தில், எனது தாய் கேஷ் ஆன் டெலிவரி மூலம் டூத் பிரஷ் ஆர்டர் செய்திருந்தார். பார்சல் மிகவும் எடை குறைவாக இருப்பதாக சந்தேகம் வந்ததால் பணத்தைக் கொடுப்பதற்கு முன்பு பெட்டிகளைத் திறந்து பார்த்தோம் என்று கூறியுள்ளார். மேலும், அன்புள்ள அமேசான் ஒரு வருடத்திற்கும் மேலாக உங்களிடம் பொருட்களை வாங்கும் எங்களை ஏமாற்றும் விற்பனையாளரை நீங்கள் ஏன் நீக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

இவரது இந்தப் பதிவு தற்போது வைரலாகி உள்ளது. மேலும், இந்தப் பதிவிற்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.