அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தை இந்திய அணி பிடித்துள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி 3 நாட்களுக்குள் முடிவடைந்தது. அதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா சதமடித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த தொடருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் டி20 போட்டிகளில் 267 புள்ளிகளுடனும், ஒருநாள் போட்டிகளில் 114 புள்ளிகளுடனும், டெஸ்ட் போட்டிகளில் 115 புள்ளிகளுடனும் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
அண்மைச் செய்தி: துருக்கியில் மீட்கப்பட்ட பெண்ணுடன் இந்திய ராணுவ பெண் மருத்துவர் – ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த புகைப்படம் வைரல்
அனைத்து வகையான ஐசிசி போட்டிகளிலும் தரவரிசையில் முதல் இடம் பிடித்த இந்திய அணியின் ஒரே கேப்டன் என்ற பெருமையை கேப்டன் ரோஹித் சர்மா பெற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே அனைத்து ஐசிசி கிரிக்கெட் போட்டிகளிலும் தரவரிசை பட்டியலில், இந்திய அணி முதன்முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்ததன் காரணமாக ஆஸ்திரேலிய அணி 111 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து 106 புள்ளிகளுடன் 3 வது இடத்தில் உள்ளது.