உறைபனியைப் பயன்படுத்தி ‘ஐஸ்கிரீம்’ தயாரித்த பெண் – சலசலப்பை ஏற்படுத்திய வைரல் வீடியோ

மணாலியில் உறைந்து கிடைக்கும் பனியை எடுத்து அதை ஐஸ்கிரீமாக மாற்றி ஒரு பெண் சாப்பிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக கோடை காலங்களில் தொண்டைக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி கொடுக்கும் வகையில் உண்ணப்படும்…

மணாலியில் உறைந்து கிடைக்கும் பனியை எடுத்து அதை ஐஸ்கிரீமாக மாற்றி ஒரு பெண் சாப்பிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாக கோடை காலங்களில் தொண்டைக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி கொடுக்கும் வகையில் உண்ணப்படும் உணவுகளில் ஐஸ்கிரீம் முக்கியமான ஒன்று. இத்தகைய ஐஸ்கிரீம் வெண்ணிலா, ஸ்ட்ராபெர்ரி ,சாக்லேட், பட்டர் ஸ்காட்ச் என பல பிளேவர்களில் வருவதோடு. ஃபலூடா, ஸ்டிக்கி டாபி புடிங், செர்ரி வொயிட்சாக்லெட் கேரமல் பார் என வித்தியாச வித்யாசமான கலவைகளோடும் நாம் சேர்த்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் சமீபத்தில் பெண் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தரையில் கிடைக்கும் உறைபனியை எடுத்து அதில் பால் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் கலந்து, ஐஸ்கிரீமாக தயாரித்து சாப்பிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

தாக்கூர் சகோதரிகள் என்ற உணவு பிளாக்கிங் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த விடியோவானது, உறைபனி பிரதேசத்திற்கே பெயர்போன மணாலியில் எடுக்கப்பட்டதாகும். இந்த வீடியோ பகிரப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை கிட்டத்தட்ட 2.7 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளதோடு, அதிகப்படியான விருப்பங்களையும் கருத்துகளையும் பெற்று வருகிறது. இருப்பினும் தரையில் கிடைக்கும் பனியை எடுத்து ஐஸ்கிரீமாக தயாரித்து சாப்பிடுவது சுகாதாரமற்ற செயல் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.