தமிழ் திரை உலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் திடீரென ட்விட்டரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். மெரினா, மனம் கொத்தி பறவை, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரெமோ, வேலைக்காரன், டாக்டர், டான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து சுனில், மிஸ்கின், கவுண்டமணி, யோகி பாபு போன்ற பலர் நடித்திருக்கும் இந்த படம் ஆகஸ்ட் மாதம் 11-ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் சுமார் 8 மில்லியன் ஃபாலோயர்களை வைத்துள்ள சிவகார்த்திகேயன் சமூக ட்விட்டரில் இருந்து சிறிது காலம் விலகுவதாக அறிவித்துள்ளார். அந்த பதிவில் “எனது அன்புக்குரிய சகோதர சகோதரிகளே.. நான் சிறிது நாள் ட்விட்டரில் இருந்து விலகுகிறேன்.. உங்களை பார்த்து கொள்ளுங்கள்.. நான் விரைவில் வருவேன்.. அனைத்து அப்டேட்டுகளும் எனது குழுவினர் உங்களுக்கு தெரிவிப்பார்”என்று குறிப்பிட்டுள்ளார்.
My dear brothers and sisters,
I am taking a break from twitter for a while.
Take care, and i will be back soon 👍😊P.S: All updates on the films will be shared here by my team. pic.twitter.com/Nf4fdqXRTy
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) April 30, 2023
திடீரென சிவகார்த்திகேயன் டுவிட்டரில் இருந்து விலகுவதற்கான காரணம் தெரியாமல் ரசிகர்கள் பலரும் குழம்பிப் போயுள்ளனர்.







