டெல்லியில் கணவனின் உடலை மகன் உதவியுடன் துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லியில் ஷ்ரேத்தா வாக்கர் என்கிற பெண்ணை அவரது காதலர் அப்தாப் கொன்று உடலை 35 துண்டுகளாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசிய சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் குறித்த தகவல்கள் வெளியாகி டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. டெல்லி பாண்டவ் நகரைச் சேர்ந்த பூனம் தனது கணவன் அஞ்சன் தாசை தனது மகன் தீபக் உதவியுடன் கொன்று உடலை 10 பாகங்களாக வெட்டி, ராம் லீலா மைதானம் அருகே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீசி எறிந்ததை போலீசார் கண்டறிந்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் இந்த கொலை நடந்துள்ளது. கொலை நடந்த அன்று உடல் பாகங்களை வெட்டிய பின் அதனை முதலில் பிரிட்ஜில் வைத்துள்ளனர். பின்னர் வெவ்வேறு நாட்களில் ஒவ்வொரு பாகமாக எடுத்துச் சென்று வெவ்வேறு இடங்களில் வீசி எறிந்துள்ளனர்.
அப்போது கைப்பற்றப்பட்ட பாகம் ஒன்று யாருடையது என்று போலீசார் விசாரணை நடத்தியபோது அஞ்சன்தாசை சில மாதங்கள் காணவில்லை என்றும் அது குறித்து உறவினர்கள் போலீசில் புகார் அளிக்கவில்லை என்பதும் தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் பூனத்திடம் விசாரணை நடத்தியபோது இந்த படுகொலை குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன.
அஞ்சன் தாஸ் தீபக்கின் மனைவியிடமும், பூனத்தின் சகோதரியிடமும் தவறாக நடக்க முயன்றதும், வீட்டிலிருந்த பணத்தை அடிக்கடி அபகரித்துச் சென்றதும் ஆத்திரத்தை ஏற்படுத்தியநிலையில் அஞ்சன் தாசை பூனம் தனது மகன் தீபக் உதவியுடன் கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.