முக்கியச் செய்திகள் இந்தியா விளையாட்டு

ஒரு ஓவர்… 7 சிக்ஸர்… 220 ரன்கள் – ருத்ரதாண்டவம் ஆடிய ருதுராஜ்

விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரின் காலிறுதி ஆட்டத்தில், ஒரே ஓவரில் ஏழு சிக்ஸர்கள் விளாசி மகாராஷ்டிரா வீரர் ருதுராஜ் உலக சாதனை படைத்துள்ளார்.

விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரின் காலிறுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் இரண்டாவது காலிறுதிப் போட்டியில் மகாராஷ்டிரா –  உத்தரப்பிரதேச அணிகள் விளையாடி வருகின்றன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு அரங்கில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற உத்தரப்பிரதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி முதலில் களமிறங்கிய மகாராஷ்டிரா அணிக்கு, அந்த அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் திருப்பதி ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். திருப்பதி, சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, மற்றொரு புறம் ருதுராஜ் ருத்ரதாண்டவம் ஆடினார். உத்தரப்பிரதேச அணி வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் விளாசினார்.

உத்தரப்பிரதேச அணி வீரர் சிவா சிங் வீசிய 49வது ஓவரில் ஒரு நோ-பால் உட்பட ஒரே ஓவரில் ஏழு சிக்ஸர்கள் விளாசி ருதுராஜ் உலக சாதனை படைத்தார். இறுதியில் மகாராஷ்டிரா அணி 50 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் எடுத்தது. தொடக்கம் முதல் இறுதிவரை நின்று ஆடிய ருதுராஜ் 159 பந்துகளில் 10 பவுண்டரி, 16 சிக்ஸர்களுடன் 220 ரன்கள் அடித்தார். ஒரே ஓவரில் ஏழு சிக்ஸர்கள் விளாசி உலக சாதனை படைத்த ருதுராஜ்க்கு கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘மீண்டும் தர்மம் வெல்லும்’ பிரதமரை வழியனுப்பிய பிறகு ஓபிஎஸ் பேட்டி

Arivazhagan Chinnasamy

சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தீரமிக்க இளைஞர்கள்

G SaravanaKumar

சிறுமி பாலியல் வன்கொடுமை; இளைஞர் போக்சோவில் கைது

G SaravanaKumar